Jump to ratings and reviews
Rate this book

அறியப்படாத தமிழகம் [Ariyappadaatha Thamizhakam]

Rate this book
நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக்கொண்டு தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரம். மூவாயிரமாண்டு வரலாற்று அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பெறுகின்றது.

135 pages, Paperback

First published January 1, 1997

201 people are currently reading
1415 people want to read

About the author

தொ. பரமசிவன்

34 books228 followers
Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.

Fondly called as ‘Tho Pa’, he has written more than 15 books which focus on the historical, archaeological and anthropological aspects of Tamil society. His works also dwell a lot on folklore. One of his finest work in this area is Alagar Kovil.

பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.

அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
336 (56%)
4 stars
194 (32%)
3 stars
51 (8%)
2 stars
7 (1%)
1 star
9 (1%)
Displaying 1 - 30 of 78 reviews
Profile Image for Godwin.
36 reviews7 followers
March 27, 2021
கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று தொ.ப. வின் இந்த நூலில் இருந்து தைப்பொங்கலின் சிறப்பு குறித்து முகநூலில் பார்த்த பதிவு ஒன்று தான் இந்த புத்தகத்தை வாசிக்க தூண்டியது. 2020-ன் இறுதியில் அவரது மறைவைத் தொடர்ந்து நாளிதழ்களில் வெளியான பல கட்டுரைகளும் அவரது ஆய்வுகள் மற்றும் நூல்களின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இந்த புத்தகத்தில் ஏழு தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளது. நாம் எளிதாக கடந்து போய் விடுகிற அன்றாடங்களின் கூறுகள் தான் இக்கட்டுரைகளின் மையம்.

வாசகனுக்கு வெறுமனே தகவல்களை மட்டும் தந்து விட்டுப் போகும் ஒரு கட்டுரை நூலாக நினைத்து கடந்து விட முடியவில்லை. முன்னுரையில் ஆசிரியர் சொல்வதைப் போன்று தமிழக பண்பாடு குறித்த ஆழமான விவாதங்களுக்கு இட்டுச் செல்லும் கருத்துக்களை இந்நூல் கொண்டுள்ளது.

தமிழர்களின் வாழ்வியல் என்பதை ஒரு சில மேல்தட்டு சாதிய, வர்க்க அடையாளங்களுக்குள் சுருக்கி விடாமல் பரந்த பார்வையோடு இந்த ஒட்டுமொத்த நிலமும், மொழியும் வரலாற்றின் வழிநெடுகே மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.
எளிய மக்களின் அன்றாடங்களின் பின்னுள்ள பண்பாட்டு விளக்கங்கள் வியக்க வைக்கின்றன.

தென்னிந்திய பக்தி இயக்க மரபு, இறைவன் ஒருவனே ஆண் என்றும், மனித உயிர்கள் எல்லாம் பெண் என்றும் கூறும் பதிவு ஆச்சரியமூட்டுகிறது.

பல்லாங்குழி விளையாட்டினூடே தனிச் சொத்துரிமையை நியாயப்படுத்தும் உணர்வுகள் பரப்பப்பட்டதும், விளையாட்டுக்கும், சூதுக்கும் இடையேயுள்ள தொடர்பும் நுட்பமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் பெளத்தமும், சமணமும் ஏற்படுத்திய தாக்கங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு சமணம் தொண்டாற்றிய செய்திகள் இன்னும் பரவலாக வாசிக்கப்பட வேண்டும்.

தமிழர்களின் உடல்நலம் சார்ந்ததாக பேசப்பட்ட அழகு இன்றைய காலகட்டத்தில் மனிதத் தோலின் நிறமாக பேசப்படுவது எப்படி என்பதற்கு ஆசிரியரின் பதில் துல்லியமானதாகவே தோன்றுகிறது.

தமிழ் மொழியின் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும் அன்பும், நேசமும் கொண்டவர்கள் அனைவரும் கட்டாயம் வாசித்து, விவாதிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.
Profile Image for Karthick.
363 reviews118 followers
March 28, 2023
நாட்டார் வழக்காற்றியல், தமிழர் தொன்மையான வரலாறு, பண்பாடு & மரபுகள், பொருண்மை பண்பாடு சார்ந்த கள ஆய்வுகளை பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தவர்களில் முக்கியமானவர் பேராசிரியர் தொ.பரமசிவன்.

அந்த வகையில், "அறியப்படாத தமிழகம்" ஒரு மாபெரும் பொக்கிஷம். தமிழர்களின் உணவு, உடை, உறவுப்பெயர்கள், தங்கை-அண்ணன்-தாய்மாமன் உறவு, தமிழ் பண்பாட்டில் தாலியும் மஞ்சளும், தைப்பூசம், தீபாவளி, விநாயகர் வழிபாடு, மத்தியான பறையர் என்கிற பிராமண பறையர், பண்டாரம் பெயர்க்காரணம், பல்லாங்குழி ஆட்டம், தமிழகத்தில் சமணம் & பௌத்தத்தின் எச்சங்கள், தமிழ் இலக்கண & பேச்சு வழக்கு, தமிழர் கருப்பு நிறத்தின் பின் உள்ள வரலாறு என்று நான் இதுவரை அறியாத பல கருத்துக்கள் புத்தகம் முழுவதும் தெறிக்கின்றன.

நாம் அறியாத தமிழ்நாட்டின் பரிமாணம் இது. அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்
Profile Image for Udhayakumar Tamileelam .
87 reviews27 followers
April 17, 2021
நாம் மறந்த அல்லது மறைக்கப்பட்ட நம் தொல் தமிழ்மரபுப் பண்பாட்டின் ஆகச்சிறந்த கட்டுரைகள்.
Profile Image for Dinesh.
123 reviews8 followers
April 3, 2022
நான் படிக்கும் தொ. பரமசிவனின் முதற்புத்தகம் இது. நம் எதிர்பார்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி வேறொரு பரிமாணத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது.

தமிழர்கள் ஏன் புண்ணியஸ்தலங்களில் தலைமுடியை மழித்துக் கொள்கிறார்கள்?

மதத்தின் பெயரால் மொட்டையடித்துத் கொள்ளும் பழக்கம் பௌத்தத் துறவிகளிடமிருந்து நாம் கற்றுக்கொண்டது

கிபி பத்தாம் நூற்றாண்டுக்கு முன்புவரை தாலி கட்டிக்கொள்ளும் பழக்கம் தமிழர்களுக்கு இல்லை

வியப்பாக உள்ளதா!

இதைப்போன்று நாம் அறிந்திராத தகவல்கள் இப்புத்தகத்தில் கொட்டிக்கிடக்கிறது!

தமிழர் உணவுப்பழக்கம், நம்பிக்கைகள், கடவுள்கள், வீடு, வாழ்வு, விழாக்கள், மரபுகள் என நம்மை ஒவ்வொரு கட்டுரையிலும் வியப்புக்குள்ளாக்குகிறார் தொ.ப.
244 reviews35 followers
June 4, 2022
புத்தகம் : அறியப்படாத தமிழகம்
எழுத்தாளர் : தொ.பரமசிவன்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் : 135
நூலங்காடி : Amazon

சில சடங்குகள் , நடைமுறைகள் காலம் காலமாக நம் புழக்கத்தில் இருந்து வருவதை நாம் பார்க்கிறோம் . ஆதியில் இருந்தே அது அப்படி இல்லை . ஏதோ ஒரு வாசலின் வழியாக தான் உள் நுழைந்து இருக்கும் . அந்த வாசலே “அறியப்படாத தமிழகம் “.

தமிழரின் உணவு, உப்பு , எண்ணெய், தேங்காய் , உறவுமுறை , தாய்மாமன் உறவு, உடை , சிறுதெய்வ வழிபாடு , தாலி , மஞ்சள் மற்றும் பல, இவை அனைத்தும் தமிழர் வாழ்வில் இருக்கும் முக்கிய அம்சங்கள் . இவை அனைத்தும் எப்படி வந்து சேர்ந்தது என்பதை குறித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம் .

எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை . “தமிழ்” என்னும் பெயரைப் பற்றிய கட்டுரை . ஆரம்பத்தில் தமிழ் என்ற சொல்லை இனிமை , பண்பாடு ஆகிய அர்த்தங்களில் தான் வழங்கியுள்ளனர் . பின்னரே அது மொழிக்கு உரிய சொல்லாகி உள்ளது .

சங்க இலக்கியங்களில் கூட “தாலி” என்னும் பொருளைப் பற்றி குறிப்பிடவில்லை . திருமணச் சடங்குகளைப் பற்றி ஆண்டாள் பாடும் பாடலில் கூட - தாலியைப் பற்றி எந்த குறிப்பும் இல்லை . கி.பி.10 ஆம் நூற்றாண்டு முதல் தான் தாலிக்கு முக்கியத்துவம் அடைந்துள்ளது . கோவில்களில் நடத்தப்பட்ட “திருக்கல்யாணங்கள் “ தாலியை இன்றியமையாத ஒன்றாக செய்து விட்டது .

தொ.ப அவர்களின் படைப்புகளில் நான் வாசித்த முதல் புத்தகம் இது . ஆய்வு நூல்களில் ஆர்வம் இருப்பவர்களுக்கு இந்த புத்தகம் நன்மை பயக்கும் .



புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி

Subasreenee Muthupandi
Happy reading
18 reviews
July 4, 2023
அரிய தகவல்களுடன்
அறியப்படாத தமிழகம்
அறிய வேண்டிய களஞ்சி்யம்!
Profile Image for Akila.
21 reviews
June 23, 2021
அறியப்படாத தமிழகம் : ஐயா தொ. பரமசிவன் கொஞ்சம் கண்திறந்து அறிய வைக்கிறார்

ஐயாவை பற்றி "கள ஆய்வில் அவர் எழுதிய அழகர்கோயில் கள ஆய்வு ஒரு முன்னோடியாக - பல அ��ுத்த தலைமுறையினருக்கு முனைவர் பட்டம் பெற வழி காட்டியது" என்று படித்தேன்.

இவர் கல்வெட்டு சான்றுகளையும் பழந்தமிழ் இலக்கிய சான்றுகளையும் மேற்கோள்காட்டி கையாளும் விதத்தை மதிப்பிடும் திறமை எனக்கில்லை என்கிறார் அணிந்துரை எழுதிய வெங்கடாசலபதி.

Longitudinal studies என்பது போன்று நம் சமுதாயத்தையும் அதன் தற்போதய வழக்கங்களையும் பற்றிய ஒரு விசாலமான புரிதலை நம் பழந்தமிழ் மக்களின் வாழ்வியலையும், அரசியல் மாற்றங்களையம் அவற்றின் தாக்கத்தையும், அதன் விளைவான சமுதாயத்தின் தாக்கமும் எளிதாக சான்றுகள் கொண்டு புரிய செய்கிறார்.

பல்லாங்குழி, உரல், கருப்பு நிறம், சாதியம், தனி உடமை உணர்வுகள் என்று நமக்குலேயே அலச வைக்கிறார்

டீவி பார்க்கும்போது "எந்திரிடி குந்தாணி" அத்தை என்னை திட்டியது கூட புரிய வைத்துவிட்டார் :)

கள ஆய்வின் பொது சொம்பில் முல்லை பூ வைத்து ஊருக்கு செய்தி சொல்லும் நுண்மை நம் தமிழ் கலாச்சாரத்தின் நளினத்திற்கு அறிய உதாரணம்.
Profile Image for Dhevaguru S.
71 reviews6 followers
January 25, 2022
As the title suggests the author attempts to unveil the unknown dimensions of Tamil Nadu in the context of anthropology with the help of examining reasearchs. What's really surprising is how the 'Tamil culture' has radically changed by acquiring traits from other cultures, which make us question the authenticity of the norms we identify with ourselves today. Kinda invokes the metaphysical thought problem of 'Ship of Theseus'. Would recommend to everyone interested to learn about the anthropology of Tamil nadu and to people who blatantly claims themselves as 'Proud Tamilians' without knowing real stuff. 3.5/5
29 reviews
January 22, 2021
All Tamil people have to read the book to know our history, cultural change, secular society. This book highlights the real Tamil culture, pride and our living.
Profile Image for Amrish Vasudhevan.
11 reviews1 follower
September 27, 2015
When I ordered this book online, I thought this would explain about the history of Tamils to a great extent. (My Bad!!) I didnt read the description of this book properly. However upon receiving this book I realised that this book explains about the culture of tamil community.

Apart from a disappointing start, I started reading this book. The author explained a lot more about the cultural and traditional values followed by the Tamils from the great literatures like Thirukkural, Silapathikaram, Puranaanuru, Aganaanuru, Seerapuranam etc.,

It starts with explaining the meaning and idea behind the name of the language "Tamil". It continues to explain more about the life and community as a whole on following chapters. This book touches about the religious and caste based conflicts arised while the evolution of the community that was affected by continuous acts of wars and the colonisation under British.

Some facts are interesting to know. Some facts provide more insight about the culture. Good read.
Profile Image for MJV.
92 reviews37 followers
September 22, 2019
அறியப்படாத தமிழகம்:

ஒரு பொருட்டாக மதிக்கப்படாத நாம் கருதாத செய்திகளை எடுத்துக் கொண்டு தொ.பரமசிவன் அவர்கள், அதில் வரலாறும் பண்பாடும் எப்படி பொதிந்துள்ளன என்று தெளிவாக விளக்கி இந்த நூலை உருவாக்கியிருக்கிறார்.

உப்பிலிருந்து, உணவு முறை, எண்ணெய், தேங்காய் வந்த வரலாறு, சிறு பெரு தெய்வ வழிபாடுகள், விழாக்கள், உடைகள், நீர்நிலைகளின் பெயர்கள், உறவுமுறை, உறவுப்பெயர்கள், பருத்தியும் நெசவும் வந்த முறை, மஞ்சள் உபயோகத்தில் வந்த முறை, பிச்சை எடுப்பது எப்படி உருவெடுத்தது, சமண பவுத்த மதங்களின் வருகை, எப்படி பக்தி இயக்கங்கள் சமண பவுத்த மதங்களை பின்னுக்கு தள்ளி முன்னெழுந்தது, யார் அந்த பீட்டர் பாண்டியன், துலுக்க நாச்சியார் என்று ஏகப்பட்ட தகவல்கள்!!!!

சொன்ன சொல்லை காப்பாற்றும் பழக்கம் எவ்வாறு சிறு தெய்வ வழிபாட்டோடு இணைந்து இருந்தது என்பதற்கான உதாரணங்கள் தான் மதுரை அழகர் கோவில் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி கோயில் , கருமாத்தூர் மூணு சாமி கோயில், தூத்துக்குடி ஆறுமுகமங்கலம் சுடலைமாடன் கோயில், சிவகங்கை கொல்லங்குடி காளியம்மன் கோயில் இப்படி ஏராளமான செய்திகளை தாங்கி நகர்கிறது புத்தகம்.

நிறைய இடங்கள் கேள்வி கேட்கவும், சில இடங்கள் கேள்விக்குள்ளாக்கவும் செய்கின்றன.... நேர்த்தியாக தொகுக்கப்பட்ட நூல்....
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books164 followers
October 7, 2022
-
Book 73 of 2022- அறியப்படாத தமிழகம்
Author- தொ.பரமசிவன்

“அறியப்படாத தமிழகம்-நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம்.”

நம் பண்பாட்டையும் பழமையையும்,வரலாற்றையும் நேர்த்தியாக எடுத்துரைக்கும் ஒரு கட்டுரை தொகுப்பு இது. நம் மொழி,வீடு-வீடு கட்டும் முறை,வாழ்க்கை,பண்டிகைகள்,விளையாட்டுக்கள்,மதங்கள் என இன்று நாம் காணும் மற்றும் நாம் இன்று மறந்து போன,மறந்துக் கொண்டிருக்கும் வரலாற்று பிண்ணணிகளை கூறுகிறது.

“இதற்கு பின்னால் இப்படி ஒன்று இருக்கிறதா?” என்று நாம் பக்கத்திற்கு பக்கம் ஆச்சரியம் படுமளவுக்கு இதில் தெரிந்துக் கொள்ள நிறையவே இருக்கிறது. முதல் நாற்பது பக்கங்கள் சற்று மெதுவாக நகர்ந்தாலும் மீதி பக்கங்கள் நம் கவனத்தை வெகுவாக ஈர்க்கும்.

நம் வரலாற்றை தெரிந்துக் கொண்டு “தமிழன்” என பெருமையாக சொன்னால் அது கூடுதல் அழகு தானே?❣️
Want to read
April 15, 2013
அறியப்படாத தமிழகம்

நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப்பெயர்கள் என அன்றாட வழாவின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக்கொண்டு வரலாற்று அசைவியக்கம் போன்றவை இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பெறுகின்றது.
Profile Image for Karthikeyan Ng.
8 reviews92 followers
May 15, 2014
Want to know more about Tamilnadu especially southern part, DO read this.
Profile Image for Cruz J.
21 reviews2 followers
September 29, 2020
அறியப்படாத தமிழகம் உண்மையில் அறியப்படாத விஷயங்களை தான் சொல்லி இருக்கு. ஆசிரியர் பழைய பழக்க வழக்கம் காண காரணங்களை பல இடங்களில் நமக்கு தெரியப்படுத்தி இருக்குறார். கண்டிப்பாக படிக்கச் வேண்டிய புத்தகம்.
Profile Image for Vaideki Thayumanavan.
50 reviews
July 23, 2024
நான் இதுவரைக்கும் அறிந்திராத என்னுடைய தமிழகத்தை பற்றி நிறையத் தகவல்கள் நான் அறிவதற்கு ஐயா தொ. பரமசிவன் அவர்களின் 'அறியப்படாத தமிழகம்' கட்டுரைத் தொகுப்பு பெரும் உதவியாக இருந்தது. இத்தொகுப்பின் முதல் கட்டுரையே 'தமிழ்' தான். மொழி இல்லாமல் ஒரு நாட்டின் பண்பாடே இல்லை என்பதற்காக இந்தக் கட்டுரையை முதலாம் கட்டுரையாக ஆசிரியர் வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

தமிழ் என்று சொல்லுக்கு இனிமை என்ற பொருள் என்று கூறி, தமிழ் ஒரு வலிமை வாய்ந்த சொல்லாக தமிழக அரசியல், சமூக பண்பாட்டு வளர்ச்சியில் எப்படி அமைத்திருக்கிறது என்பதை நாம் அறியமுடியும். தமிழர்கள் தண்ணீரை எவ்வளவு முதன்மையாகக் கருதுகிறார்கள் என்பதனை நாம் செய்யும் சில சடங்குகளை உற்றுக் கவனித்தால் தெரியும் என்பது போல, அன்றாட வாழ்வில் தண்ணீரைச் சார்ந்து நாம் செய்யக்கூடிய செயல்களை எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளார். தமிழர்கள் கொண்டிருந்த உணவுப் பழக்கம், நாம் சமைக்கும் முறை, விஜயநகர ஆட்சி தமிழ்நாட்டிற்குள் வந்ததால் ஏற்பட்ட சில உணவு மாற்றங்கள் முதலிய தகவல்களை நாம் அறிய முடியும் இந்த கட்டுரையில்.
salary என்ற ஆங்கிலச் சொல் salt (உப்பு) என்ற சொல்லிலிருந்து வந்தது என்பதன் விளக்கத்தை அருமையாகக் கூறியுள்ளார் தொ. ப. ஐயா.

'வீடும் வாழ்வும்' தலைப்பில், நம் சமூகத்தில் ��ரு வீடு கட்டுவதில் இருந்த, நாம் கவனிக்காமல் போன சில சமூக ஏற்ற தாழ்வுகள் நமக்குத் தெரிய வரும். தமிழ்ச் சமூகத்திலிருந்து மறைந்து போன உறவு பெயர்கள், சங்க காலத்தில் நாம் குழந்தைகளுக்கு இட்ட அழகான தமிழ்ப் பெயர்களை இழந்து எப்படிப் பிற மொழிப் பெயர்கள் சில மக்களால் நவீனமாகக் கருதப்படுகிறது என்பதனை நாம் அறியலாம்.

'தைப்பூசம்' கட்டுரையில் பக்தி இயக்கங்கள் எழுவதற்கு முன் நாம் கொண்டாடப்பட்ட திருவிழாக்களை பெருஞ்சமயங்களான சைவமும் வைணவமும் எப்படித் தன்வயமாக்கிக்
கொண்டது என்பதனை நாம் அறியலாம். தமிழர்களைப் பொறுத்தவரை 'Festival of lights' திருக்கார்த்திகையே தவிர, தீபாவளி இல்லை என்பதனையும் தொ. ப. ஐயா சான்றோடு விளக்கியுள்ளார். இஸ்லாமியப் பாணர்கள் பக்கிரிசாக்களாக தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் ஆற்றிய தொண்டு பற்றி நன்கு அறியமுடிந்தது.

'பல்லாங்குழி' கட்டுரையில் தனிச் சொத்தின் வளர்ச்சியினால் விளைந்த வறுமையினைப் பண்பாட்டு மூலமாக நியாயப்படுத்தும் விதமாக உருவான விளையாட்டு பல்லாங்குழி என்பதை தொ.ப. ஐயா விளக்கிய விதம் வியக்கும்படியாக இருந்தது.

'தமிழகப் பௌத்தம்: எச்சங்கள்' கட்டுரையின் வழியாக, சமணமும் பௌத்தம் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற மாதங்களாக இருந்தது எனவும்,'கல்லூரி', 'மாணாக்கன்' போன்ற சொற்கள் சமண மதத்தினால் வந்தது என்பதனை நாம் தெரிந்துகொள்ளலாம். தமிழ்நாட்டில் பெண் கல்வியை வளர்த்தது சமணம் என்பது என்னை ஆச்சரியப்பட வைத்த ஒரு செய்தியாகும்.

'பேச்சு வழக்கும் இலக்கண வழக்கும்' கட்டுரை மூலமாகத் தமிழிலக்கணம் நிலைத்திருப்பதற்குக் காரணம் பலதரப்பட்ட பேச்சுவழக்குகள் நம் தமிழ்நாட்டில் இருப்பதால்தான், என்று அழுத்தமாக நிறையச் சான்றுகளுடன் தொ. ப. ஐயா கூறியுள்ளார். தமிழ் மரபு பொறுத்தமட்டில் வாய்மை எனப்படுவது எவ்வளவு உயர்வான குணங்களாகக் கருதப்படுவது என்பதனை, கிராமப்புறங்களில் சத்தியப் பிரமாணம் என்று வழங்கக்கூடிய ஒரு சடங்கு மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம் என்று சான்றுகளுடன் கூறப்பட்டுள்ளது

இறுதி கட்டுரையான 'கறுப்பு' கட்டுரையில் அழகு என்ற கருதப்பட்ட கறுப்பு நிறம் எப்படித் தன் மதிப்பை இழந்து வேறுபாட்டுக்குரிய பொருளாக மக்களால் கருதப்படுகிறது என்பதனை இவ்வளவு அழகாக தொ.ப. ஐயாவை விட வேறு யாரும் விளக்க முடியாது என்று தோன்றியது.

'அறியப்படாத தமிழகம்' புத்தகம் ஒரு தகவல் களஞ்சியம். நான் இப்பதிவில் கூறியிருக்கும் விடயங்களின் அளவு அக்களஞ்சியத்தில் இருக்கும் ஒரு சிறு தானியத்தின் அளவு தான். களஞ்சியத்தின் முழு ருசியையும் அறிவதற்கு இப்புத்தகத்தை அனைவரும் வாசிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். அதுவே தொ.ப. ஐயாவின் அயராத ஆராய்ச்சிகளுக்கு நாம் செய்யும் நன்றி கடன் என்று நான் கருதுகிறேன்!
188 reviews4 followers
February 3, 2015
This book "Ariyapadatha thamizhagam" written by tho.parama sivan has worked lot of his energy researching the origination of old tamil word, culture n its renaissance. Every page I turned with awe and jaws dropped to the floor as he started unravelling the history of many details. Great book to read n have a copy at home.
Profile Image for Ananth.
4 reviews2 followers
March 1, 2020
The book was a fantastic read. The author's observation and research are impressive. I wish the book is one of the few to translate in other languages. I highly recommend the book to understand the Tamil way of life, despite multiple religions and languages, tried to influence Tamil, it still maintains the originality over the centuries.
Profile Image for Mugunth Subramanian.
18 reviews2 followers
February 22, 2016
தமிழ் கலாச்சாரத்தினை அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.
Profile Image for Nithyakarpagam.
17 reviews8 followers
November 28, 2020
நாம் வழி வழியாய் பின்பற்றிவரும் கலாச்சாரத்தின் வரலாற்றை விவரிக்கும் நூல்.
19 reviews
April 9, 2022
Book is an collection of short essays on Tamil Nadu's history. Got to know many interesting facts on familiar places
Profile Image for Dean.
39 reviews1 follower
January 1, 2022
தொ. பரமசிவன் அவர்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டுள்ளேன். அவரின் நான் படிக்கும் முதல் நூலிது.

இந்நூலில் ஏழு தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் உள்ளன. சர்வசாதாரணமான விடயங்களை எடுத்து ஆழமாகவும் நுணுக்கமாகவும் தமிழர் வாழ்வியலை ஆராய்கிறார் ஐயா.

ஒரு பரந்த பார்வையினூடாக நிலம், மொழி, தமிழர் வாழ்வியல் வரலாற்றை விளக்குவது மூலம் நாம் கடந்து வந்த பாதையையும் நம் வாழ்வியல் எவ்வாறு மாறியது என்பதை அறிகிறோம். மக்களின் பண்பாட்டு அம்சங்களைப் பற்றிய விளக்கம் வியக்கத்தக்கவை.

என்னை மிகவும் வியக்க வைத்த தரவு, பல்லாங்குழி விளையாட்டின் மூலம் தனிமனிதச் சொத்துரிமையை விளக்கியது. விளையாட்டுக்கும் சூதுக்குமுள்ள தொடர்பு என்பதும் நுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உப்பிலிருந்து, உணவு முறை, எண்ணெய், தேங்காய் வந்த வரலாறு, தெய்வ வழிபாடுகள், விழாக்கள், உடைகள், நீர்நிலைகளின் பெயர்கள், உறவுமுறை, உறவுப்பெயர்கள், பருத்தியும் நெசவும் வந்த முறை, மஞ்சள் உபயோகம், பிச்சையெடுத்தல் எப்படி வந்தது, சமண பௌத்த மதங்களின் வருகை, எப்படி பக்தி இயக்கங்கள் சமண பௌத்த மதங்களை புறந்தள்ளி முன்னெழுந்தது என அபாரமான தகவல்கள்.

பீட்டர் பாண்டியன் வரலாறும் துலுக்க நாச்சியார் வரலாறும் கூட அதி சுவாரசியமானவை.

கறுப்பு எனும் அத்தியாயம் நடைமுறையில் உள்ள நிறப்பாகுபாடுகளை ஆராய்கிறது. உடல்நலம் சார்ந்ததாக பேசப்பட்ட அழகு இன்று தோலின் நிறமாக பேசப்படுவது வருந்தத்தக்கது.

ஒரு விடயம் வெளிச்சம். எனக்கு ஏற்கனவே தெரிந்தது தான். தமிழ் நாட்டில் உள்ள பலவித சாதிய சமூக கட்டுப்பாடுகளால் எழும் பிரச்சினைகளைக்குத் தொடக்கப் புள்ளியே விஜயநகர ஆட்சி தமிழகத்தில் அமைந்தது தான். குடிவந்தவர்கள் கொணர்ந்த கொடிய நடைமுறைகள் அவை. அவற்றை வெளிக்காட்டி உண்மையை விளக்குகிறது இந்நூல்.

தமிழ் மொழி, தமிழர் பண்பாடு மீது அன்பும், நேசமும் கொண்டோர் அனைவரும் கட்டாயம் படித்து ஆராயவேண்டிய, முக்கியமான நூல் இது.
Profile Image for Sangamithra.
58 reviews25 followers
April 27, 2022
💥தமிழர்களின் உணவு முறை, அதன் வரலாறு, நமது வாழ்வு முறை, நாம் கொண்டாடும் பண்டிகைகள், பொழுதுபோக்க நாம் விளையாடும் விளையாட்டுக்கள், பௌத்த மதம், சமண மதம் மற்றும் சித்தர்கள் குறித்த தகவல்கள், சமயங்களுக்கு இடையே நடந்த தத்துவச் சண்டைகள், கறுப்பு நிறம் குறித்து நமது இலக்கியங்களில் காணப்பெறும் தகவல்கள் என
ஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

💥தமிழர்களின் உணவு முறை, அதில் தற்போதைய காலக் கட்டத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள், உணவு சார்ந்த நம்பிக்கைகள், நாம் பயன்படுத்திய எண்ணெய் பற்றிய குறிப்புகள், தேங்காய் தமிழகத்திற்கு வந்த வரலாறு, சிறு தெய்வங்களின் உணவு

💥வீடு கட்டும் முறை, நமது உடையும் அதில் அடைந்துள்ள மாற்றங்களும், குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் முறை, தாலி குறித்து இலக்கியங்களி���் கிடைக்கும் சான்றுகள்

💥பள்ளிக்கூடம்/கல்லூரி போன்ற வார்த்தைகளுக்கும் சமண மதத்திற்கும் உள்ள தொடர்பு, சமண மதத்தின் வீழ்ச்சிக்குக்கான காரணங்கள், சித்தர்கள் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தமைக்கு காரணங்கள், பட்டிமண்டபம் என்ற கலை வடிவத்திற்கும் பௌத்த மதத்திற்கும் உள்ள தொடர்பு

💥பொழுது போக்குவதற்காக ஆடப்படும் பல்லாங்குழி முதலான விளையாட்டுக்களில் இருந்து பெறப்படும் சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த கருத்தியல்கள்

💥தைப்பூசம், தீபாவளி, விநாயகர் வழிபாடு போன்றவை தமிழகத்தில் தோன்றிய வரலாறு, நாகூர் தர்க்காவுக்கு சென்று வழிபடும் தமிழர்கள் போலவே இஸ்லாமியர்கள் வழிபடும் விருத்தாசலத்தில் உள்ள ‘இந்து’ கோவில், பண்டாரம் என்ற வார்த்தைக்கான உண்மையான பொருள், இறப்புச் சடங்குகள் மூலம் மரணத்தைப் பற்றிய தமிழர்களின் எண்ணம்,

💥கி.பி 13-ஆம் நூற்றாண்டு வரை கொண்டாடப்பட்ட கருப்பு நிறம் அதற்குப் பிறகு அழகற்றதாக கருதப்பட்டதற்கான காரணங்கள்

என இவ்வளவு செய்திகளையும், இதற்கு மேலும் அதிகமான தகவல்களையும் இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.
Profile Image for Srikumaran Ramu.
12 reviews
August 8, 2024
தேதி: 08/08/2024
புத்தகம்: அறியப்படாத தமிழகம்
ஆசிரியர்: தொ. பரமசிவன்
வெளியீடு: எதிர் வெளியீடு

"அறியப்படாத தமிழகம்" எனும் இந்த நூல் பண்டைய தமிழரைப் பற்றியும் அவர்களின் வாழ்வு முறைகளைப் பற்றியும் அறிந்துகொள்ள விழையும் யாவரின் கைகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஓர் கையேடு ஆகும்.

இந்த நூலானது பல கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஆகும். ஐயா தொ.பரமசிவன் அவர்கள் தன் கள ஆய்வுகளாலும் இலக்கண இலக்கிய ஆராய்ச்சிகளின் மூலமாகவும் பெற்ற அறிவினை இப்புத்தகத்தின் மூலம் நமக்கு பரிசளிக்கிறார்.

பெரியாரிய சிந்தனைவாதியான தொ.ப அவர்கள் இந்த புத்தகத்தில் பல இடங்களில் சாதிகளைப் பற்றி குறிப்பிட்டுருந்தது தொடக்கத்தில் நெருடலாக இருந்தது. ஆனால், சாதிய ஒடுக்குமுறைகளையும் தீண்டாமையையும் ஒழிக்க சாதிகளின் வரலாற்றையும் அவற்றின் சமூக கட்டமைப்புகளையும் அறிந்து கொள்வது அவசியம் என்பது பின்னால் விளங்கிற்று.

'தமிழ்' என்ற அத்தியாயத்தில் தொடங்கி, 'வீடும் வாழ்வும்', 'தைப்பூசம்', 'பல்லாங்குழி' என விரிந்து 'கறுப்பு' எனும் - நம் அறியாமையால் மறக்கப்பட்ட மறுக்கப்பட்ட - நிறத்தைப் பற்றிய கட்டுரையோடு நமக்கு விடை கொடுக்கிறது இப்புத்தகம்.

மதிப்பிற்குரிய ஐயா தொ.பரமசிவன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்ற பெருமிதத்தை இந்த புத்தகம் என்னுள் விதைத்துச் சென்றது.
3 reviews
April 27, 2024
In Ariyapadadha tamizhagam Author Tho.Pa walks us through TamilNadu's history and culture change in a way unexplored before with his anthropology study.

Many tamil word we speak holds a rich history and name reasoning which is forgotten over time Ex: sambalam (salary) , kaaikari (vegetables), kari (meat) e.t.c..

Certain foods ,trees , vegetable which we assume have tamilnadu origin were brought
to tamilnadu when it was ruled by different dynasties.

Facts on certain superstitious beliefs, casteism, and some basic rights like having a window in house is considered a privilege and was approved by kings only to the upper caste are upsetting.

Few topics like tamilnadu festivals(celebrated by all relegion) Vs hindu festivals were eye opening.

Facts about emerging of different religion like buddhism, jainism, christianity , casteism within a religion, protests and movements against different religion were insightful.

This book is a must read for tamil society to understand its evolution.
108 reviews2 followers
September 2, 2022
அறியப்படாத தமிழகம்! இந்த நூலை பல நாட்கள் வாசிக்க எடுத்த என்னால் எனோ அப்போது முடிக்க முடியவில்லை. ஆனால் இதனை இப்பொழுது இவனால் முடியும் என்பது போல இன்று தான் முடிக்க முடிந்தது. 7 கட்டுரைகள் தமிழ், வீடும் வாழ்வும், தை பூசம், பல்லாங்குழி, பெளத்தம், பேச்சு வழக்கு, கருப்பு. கருமை எப்படி இழிவான வண்ணம் என்ற எண்ணம் உண்டானது? தமிழ் பேச்சு வழக்கில் கூட இலக்கணம் பாராட்டும் அதன் வாயிலாக தான் இன்று வரை உயிர்ப்புடன் இயங்குகிறது. தமிழர்கள் பௌத்தம், சமணம் மரப்புகான தொடர்பு,l. ஒரு விளையாட்டு எப்படி ஒரு நாகிரிகத் உடன் தொடர்பு, தை பொங்கல் நம் தமிழ் மரபு அதன் பால் கொண்ட சடங்குகள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள், வழக்கு ஒழிந்த வழக்குமுறை. Information என்ற தொனி எங்குமே இல்லை ஆனால் யவுமே ஒரு ஆச்சர்யம். தோ. பா அவர்கள் உடைய ' அழகர் கோவில்' கண்டிப்பாக அடுத்த வங்க வேண்டிய ஒன்று என்று இந்த புத்கம் வாயிலாக அறிகிறேன்!!!!

சாதி அரசியல் என்றுமே ஒன்றுரோடு ஒன்று பின்னிய வாழ்வு தான் இங்கு.
Profile Image for Sambath.
53 reviews
September 10, 2022
This is a small book, so a small review. I had my apprehension about the quality before reading the book, even during the first few pages of the book. But the overall experience about the book is very good. There are many many old facts that one can come to know about my Tamil tradition here. Those make us very proud. But apart from a few chapters the rest are very shallow in research and are not convincing or intriguing. And to find no introduction note is very strange. One may find the book as collection of short snippets heard and reproduced without much verification or research.

But to finish a book about my Tamil and it's culture, definitely it captivated me during the read and I'm happy I chose to read it. I recommend all Tamil readers do the same.
Profile Image for Anitha Ponraj.
264 reviews40 followers
September 11, 2023


புத்தகம் : அறியப்படாத தமிழகம்
ஆசிரியர் : தொ. பரமசிவன்
பக்கங்கள் : 136
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்

தொ. பரமசிவன் அவர்களின் பாளையங்கோட்டை - ஒரு மூதூரின் வரலாறு புத்தகம் மூலம் நான் அறிந்த ஊரின் அறியாத வரலாற்றை வாசித்த எனக்கு, அறியப்படாத தமிழகம் புத்தகம் நாம் கொண்டாடும் பண்டிகைகள், நாம் காலகாலமாக செய்து வரும் பழக்க வழக்கங்கள் போன்றவை ஏற்பட்ட காரணங்களை ஆய்வு செய்யும் நூலாக அமைகிறது.

சில வருடங்களுக்கு முன் தமிழர் சடங்குகளை குறித்த அறிவியல் விளக்கத்தை ஒரு புத்தகத்தில் வாசித்திருக்கிறேன். இந்த புத்தகம் அவற்றின் வரலாற்று பின்னணியை, உருவான காரணங்களை அலசுகிறது.

தமிழில் தொடங்கும் புத்தகம் நம் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், அவை சார்ந்த நம்பிக்கைகள், நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எண்ணெய் போன்றவை பிறந்த கதை. சிறுதெய்வங்கள் வரலாறு. நாம் பயன்படுத்தும் வழக்கு மொழிகளின் தோற்றம்.

ஊர்களில் வைக்கப்படும் பெயர்களின் காரணங்கள், வெள்ளையர்களின் தாக்கத்தால் வைக்கப்பட்ட பெயர்கள்.

தமிழக கலாச்சாரத்தில் சமணம், பௌத்த மதங்களின் தாக்கம். தைப்பூசம், தீபாவளி போன்றவை தோன்றிய வரலாறு என்று நீண்டு நம் திராவிட நிறமான கருப்பு பிற படையெடுப்புகள் மற்றும் ஆட்சியமைப்பால் எப்படி ஆளப்பட்ட நிறமாக மாறியது என்ற குறிப்புடன் நிறைவடைகிறது.

நம் பழக்கம் வழக்கங்கள் பண்டிகைளில் பல நம் பூர்வமாக இல்லாமல் பிற தாக்கங்கள் மூலம் வந்தவை என்ற உண்மையை வாசிக்க ஆர்வமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. நிறைய விஷயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. தமிழகம் குறித்த பல அரிய தகவல்கள் நிறைந்த பெட்டகம் இந்த அறியப்படாத தமிழகம்.


Profile Image for Yadhu Nandhan.
256 reviews
March 11, 2023
பல்லாயிரம் ஆண்டுகள் தொல்லிய தமிழ்ப் பண்பாட்டினை நாம் தொடர வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் உள்ளது ஆனால் சிக்கல் என்னவென்று பார்த்தால் நம் வழக்காறுகளில் எவையெல்லாம் தமிழ்த் தன்மை கொண்டவை என்ற தெளிவு நம்மில் பெரும்பான்மையருக்கு இல்லை என்பதாகும். அதனால் நமது வேர்களைப் பற்றிய ஒரு அறிமுகம் இந்நூல் ஆகும். இஃது அருந்தமிழைப் பற்றியும் தமிழர் உணவைப் பற்றியும் தமிழர் உடையை பற்றியும் தமிழர் சமயத்தை பற்றியும் தமிழர் பண்பை பற்றியும் இவற்றுக்கு இடையே புதைந்திருக்கும் சுவையான வரலாற்று நிகழ்வுகளை பற்றியும் தன் முப்பதாண்டு கால தமிழ்ப் பண்பாட்டினை நோக்கிய பயணத்தில் கண்டும் கேட்டும் ஐயா தொ பரமசிவன் தெளிந்த செய்திகளை கொண்ட சிறு சிறு கட்டுரைகளின் சிறப்பான தொகுப்பாகும்.
Displaying 1 - 30 of 78 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.