'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் நினைவுக்கு வரும். ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகளை மிக எளிதாக அவர் விளக்கும்போது 'ஜாடிக்கேற்ற மூடி' போல, குபீரெனக் கிளப்பிவிடுகிற நகைச்சுவை உவமானங்களும் உச்சக்கட்ட ரசனைக்கு உள்ளானவை.
'ஏன்? எதற்கு? எப்படி?' - முதல் தொகுதி இன்றைக்கும் பல இளைஞர்களின் விருப்பத்துக்குரிய ரெஃபரன்ஸ் புத்தகமாக விளங்குகிறது. தொடர்ந்து புதிய வாசகர்களும் அதை வாங்கிப் படித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 'கேள்வி_பதில் பகுதியை மீண்டும் ஜூ.வி_யில் தொடங்கலாம்' என்று சுஜாதாவிடம் கேட்டபோது, 'நான் தயார்... ஆனால், கேள்விகளை எழுதி அனுப்புவதில் வாசகர்களுக்குப் பழைய ஆர்வம் இருக்குமா?' என்று நியாயமான சந்தேகத்தையும் எழுப்பினார்.
ஜூ.வி. வாசகர்கள் மீது நான் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை இம்முறையும் பொய்க்கவில்லை. புல்லில் தொடங்கி பிரபஞ்சம் வரைக்கும் கேள்விச் சரங்களைத் தொடுத்து, என்னையும் சுஜாதாவையும் திணறடித்துவிட்டார்கள். அன்பான, உற்சாகமான, ஈடுபாடுமிக்க 'போட்டா போட்டி'யாகவே வாசகர்களும் சுஜாதாவும் கேள்வி_பதில் அரங்கில் இணைந்து கரம் கோர்த்து, 106 அத்தியாயங்களை வெளுத்துக் கட்டினார்கள்.
இதோ... சுடச்சுட அந்த இரண்டாவது தொகுப்பும் உங்கள் கைகளில் தவழ்கிறது! விகடனின் தரமான வெளியீடுகளுக்கு இன்னொரு அணிகலனாக அமைந்திருக்கும் இந்தப் புத்தகத்துக்கும் வாசகர்களாகிய நீங்கள் பேராதரவு தருவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
Sujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.
As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.
அறிவார்ந்த பதில்களினூடே பகடி செய்வதில் சுஜாதாவிற்கு நிகர் அவரே.
க்ளோனிங்கைச் சட்டரீதியாக்கிவிட்டால் என்ன? எங்களுக்கு இன்னொரு சுஜாதா கிடைப்பாரே?
சுஜாதவின் பதில்: என்னை க்ளோன் செய்வதற்கு முன் டயபடீஸ், இதய நோய் போன்றவற்றின் குரோமோஸோம்களைக் கண்டுபிடித்துத் திருத்த வேண்டும். அப்படிச் செய்தாலும் வருகிற புதியவன், கதை எழுதுவது உத்தரவாதமில்லை. அதேமாதிரி, வீரப்பனை க்ளோன் செய்தால் சந்தனம் கடத்துவதும் உத்தரவாதமில்லை. ஒருவேளை சுஜாதா II சந்தனம் கடத்தலாம். வீரப்பன் II கதை எழுதலாம்... எல்லாம் வளர்ப்பதைப் பொறுத்தது.
மழுமழுப்பாக இருக்கும் பாண்டா கரடி பற்றி சுவாரஸ்யமாக ஏதும் தகவல்கள் இருந்தால் சொல்லுங்களேன்?
சுஜாதவின் பதில்: மொரட்டுப்பாளையம் என்று உங்கள் ஊருக்கு பெயர் எப்படி வந்தது என்று கேட்டிருந்தேனே... முதலில் அதற்கு பதில் சொல்லுங்கள். அதற்கப்புறம் பாண்டாவைப் பற்றி வேண்டிய தகவல்கள் தருகிறேன்.
This book is really worth to give a read.Sujatha answers to every query in simple way with scientific proofs and dossier on ur desk.He answers every question in jovial way and making u to burn some neurons as well.. "must read" book for sujatha fans..
இதில் படிக்கும் விஷயங்களை அப்பப்போ எடுத்து விட்டால் அப்ளாஸ் வாங்கலாம்! ஒரே அடியாக க்ளாஸ் எடுப்பது போல் நடை இல்லாமல், சுஜாதா வின் டிரேடு மார்க் ஹுயுமர் உடன் படிக்க மிகுந்த சுவாரஸ்யமான புத்தகம்.
Our author answers every question in jovial way and this book is really worth to give a read. Informative Science Questionnaire knowledge , suitable for all age groups.