தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

118 views
புத்தகக் திருவிழாக்கள்

Comments Showing 1-28 of 28 (28 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Prem (new)

Prem | 225 comments Mod


47வது சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கிவிட்டது. இந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்க நினைத்திருக்கும் புத்தகம் "இதயங்களின் உதவியாளர்" என்ற ரூமியின் கவிதைகள் புத்தகம். க. மோகனரங்கன் க. மோகனரங்கன் மொழிபெயர்ப்பில் நூல்வனம் வெளியீடாக வந்துள்ளது.



இந்த நூலைப் பற்றி
எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவு: ரூமியை புனைதல் (https://www.jeyamohan.in/195504/)

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனின் பதிவு: பறக்கும் சுடர்கள் (https://www.sramakrishnan.com/%E0%AE%...)


message 2: by Prem (new)

Prem | 225 comments Mod
எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் அவர்களது பதிப்பகங்கள் கொண்ட அரங்குகள் பற்றி பதிவிட்டுள்ளனர்.

இணைப்பு: https://www.sramakrishnan.com/%e0%ae%...


இணைப்பு: https://www.jeyamohan.in/195431/


பா.ராகவன் மெட்றாஸ் பேப்பர் இதழில் வெளிவந்த தொடர்கள் புத்தகங்களாக ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் மூலம் வெளிவருவதாக பதிவிட்டிருந்தார்.

இணைப்பு: https://writerpara.com/?p=16453

பாரதி புத்தகாலயம் அவர்களுக்கான அரங்கு எண் பதிவிட்டுள்ளனர். வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


நீலம் அரங்கு எண்: F67


வாசகசாலை அரங்கு எண்: 353



message 3: by Shan Sundar (new)

Shan Sundar | 1 comments Awesome handy info. Thanks for sharing this.


message 4: by Prem (new)

Prem | 225 comments Mod
புத்தகக் கண்காட்சியை நடத்தும் பபாசி சங்கத்தின் இணையதளம் (https://bapasi.com/) பல வாசகர்களுக்கு பயனுள்ள சுட்டிகளை வழங்குகிறது.

புத்தக கண்காட்சியின் எந்த எந்த பதிப்பகங்கள், விற்பனையாளர்கள் எந்த ஸ்டால்களில் உள்ளனர் என்ற அட்டவணை: https://bapasi.com/cbf-2024-stalls/

புத்தக கண்காட்சியின் ஸ்டால்களின் வரைபடம்: https://bapasi.com/wp-content/uploads...

ஒவ்வொரு நாளும் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளின் அறிவிப்பு: https://bapasi.com/events-2024/

சில பதிப்பகங்கள் எந்த புத்தகங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களையும் வழங்கியுள்ளன: https://bapasi.com/book-search/

ஜனவரி 12, 13, 14, 15 நாட்களில் நடக்கப் போகும் நிகழ்சிகள் இங்கே:



message 5: by Prem (new)

Prem | 225 comments Mod
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்த வருடப் புத்தக கண்காட்சியில் என்ன புத்தகங்கள் வாங்கலாம் என்று பரிந்துரைக்கிறார்: https://www.sramakrishnan.com/%e0%ae%...

1. நினைவின் குற்றவாளி – கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன், வேரல் பதிப்பகம் ₹130
(நகுலன் பற்றிய நினைவுகளும் ஆழ்ந்த வாசிப்பு அனுபவக்குறிப்புகளும் கொண்டது.)

2. கதை இல்லாதவனின் கதை- மலையாளம்- எம். என். பாலூர். தமிழில்: த. விஷ்ணுகுமாரன்- சாகித்திய அகாடெமி ₹340
(கதகளி கலைஞரின் வாழ்க்கை நினைவுகளைச் சொல்லும் அற்புதமான படைப்பு. )

3. பழந்தமிழ் வணிகர்கள் by கனகலதா முகுந்த் தமிழில்: எஸ்.கிருஷ்ணன் கிழக்கு பதிப்பகம் விலை ₹185
(சங்க காலத்தில் ஆரம்பித்து தமிழ் வணிகம் காலப்போக்கில் என்னென்ன மாற்றங்களை அடைந்துள்ளது என்பதை ஆராயும் நூல்.)

4. தென் காமரூபத்தின் கதை- இந்திரா கோஸ்வாமி – தமிழில்:: அ. மாரியப்பன் சாகித்திய அகாடெமி ₹175
(அஸ்ஸாமின் கடந்தகாலத்தைச் சொல்லும் சிறப்பான நாவல். இந்திரா கோஸ்வாமி ஞானபீடம் பரிசு பெற்றவர்)

5. திருப்புடைமருதூர் ஓவியங்கள் – சா. பாலுசாமி, செம்மொழி நிறுவனம். சென்னை. ₹3,000
(தாமிரபரணி போர் பற்றிய அழகிய வண்ண ஒவியங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்ட நூல். மிக நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறார்கள்)

6. அத்தங்கி மலை – பி. அஜய் ப்ரசாத்- தெலுங்குச் சிறுகதைகள் -தமிழில்:: க. மாரியப்பன் : எதிர் வெளியீடு ₹250


message 6: by Ramya (new)

Ramya | 2 comments நன்றி. பயனுள்ள தகவல்கள்.


message 7: by Prem (new)

Prem | 225 comments Mod
புத்தகக் கண்காட்சிக்கு செல்ல இயலாத ஏக்கத்தை கண்காட்சி பற்றிய பதிவுகள், காணொலிகள் கண்டு சிறிதேனும் ஆற்றுப்படுத்திக் கொள்கிறேன். அப்படித் தேடிய போது கண்டடைந்து இந்த "ஆல்டீஸ் அரட்டை அரங்கம்" (https://www.youtube.com/@AldysArattai...) என்ற இந்த YouTube காணொலி ஓடை. முக்கியமான புத்தக அரங்குகள் பற்றி 3 காணொலிப் பதிவுகளும், குழந்தைகள் புத்தக அரங்குகள் பற்றி ஒரு பதிவும் மற்றும் இவர் வாங்கிய புத்தகங்கள் பற்றி ஒரு தனிப் பதிவும் வெளியிட்டுள்ளார். கண்காட்சிக்கு செல்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், கண்காட்சிக்கு செல்ல இயலாதவர்களுக்கு மெய்நிகர் அனுபவமாகவும் இவரது பதிவுகள் இருக்கும்!

புத்தகங்கள், வாசிப்பு குறித்து "மாறாப் புன்னகையோடும் தீரா உற்சாகத்தோடும்" தொடர்ந்து காணொலிகள் பதிவு செய்து வருகிறார். இவர் பதிவுகளைப் பயன்படுத்திக் கொள்ளவும்!

முக்கியமான புத்தக அரங்குகள்:
பதிவு 1: https://www.youtube.com/watch?v=DCTwK...
பதிவு 2: https://www.youtube.com/watch?v=2qoef...
பதிவு 3: https://www.youtube.com/watch?v=TKVIQ...

குழந்தைகள் புத்தக அரங்குகள்: https://www.youtube.com/watch?v=lTTeH...

இவர் வாங்கிய புத்தகங்கள்: https://www.youtube.com/watch?v=frArR...


message 8: by Prem (last edited Jan 12, 2024 02:25PM) (new)

Prem | 225 comments Mod
பனுவல் புத்தக நிலையம் - இணையத்தில் எந்த தமிழ் புத்தகம் பற்றி தேடினாலும் வரும் முதல் ஐந்து இணைப்புகளில் ஒன்று பனுவல். இவர்களது தொகுப்பு மிகப் பெரியது. "பனுவல் ராம்" அவரது நண்பர்களுடன் நடத்தும் YouTube ஓடை "Missed Movies New Wave ". புத்தகங்கள் பற்றிய பரிந்துரைகள், உரையாடல்கள் அதில் பதிவிடுகிறார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியை பற்றி சில காணொலிகள் பதிவிட்டுள்ளார்.

பதிவு 1: அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய புத்தகங்கள் (https://www.youtube.com/watch?v=BILIK...)
1. நீர்வழிப் படூஉம் - தேவிபாரதி (தன்னறம் நூல்வெளி)
2. ரூமி கவிதைகள் - க.மோகனரங்கன் (நூல்வனம்)
3. பிரார்த்தனையை பின்தொடர்ந்து - சுந்தர் சருக்காய்/சீனிவாச ராமாநுஜம் (எதிர்)
4. அந்தோனின் ஆர்த்தோ-ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் (நாடகம்) - சாரு நிவேதிதா
5. சொர்க்கத்தின் பறவைகள் - அப்துல்ரஸாக் குர்னா/லதா அருணாச்சலம் (எதிர்)
6. ஆந்த்ரேய் தார்கோவ்ஸ்கி - ராம் முரளி (நீலம்)
7. யுத்த தூஷணம் - ஷோபாசக்தி (கருப்புப் பிரதி)
8. கு. அழகிரிசாமி கட்டுரைகள் - பழ அதியமான் (காலச்சுவடு)
9. உலகச் சிறுகதைகள் - ஆர். சிவகுமார் (சத்ரபதி)
10. பொந்திஷேரி - ரமேஷ் பிரேதன் (யாவரும்)

பதிவு 2: புத்தகப் பரிந்துரைகள் (https://www.youtube.com/watch?v=I76lu...)
1. புறப்பாடு - ஜெயமோகன் (விஷ்ணுபுரம்)
2. புலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன் (காலச்சுவடு)
3. சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள் (எதிர் வெளியீடு)
4. வன்மம் - பாமா (நியூ செஞ்சுரி)
5. இனி நாம் செய்ய வேண்டுவது யாது? - லியோ டால்ஸ்டாய் (வ.உ.சி)
6. எதற்காக எழுதுகிறேன்? - சி. சு. செல்லப்பா (சந்தியா பதிப்பகம்)
7. கதையும் புனைவும் - பா.வெங்கடேசன்
8. சக்காரியாவின் கதைகள் - பால் சக்கரியா (வம்சி, சாகித்ய அகாதெமி)
9. நட்ராஜ் மகராஜ் - தேவிபாரதி ()

பதிவு 3: ரூ. 200க்கு உட்பட்ட சிறந்த 10 புத்தகங்கள் (https://www.youtube.com/watch?v=OT8pz...)
1. ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன் (காலச்சுவடு )
2. பெத்தவன் - இமையம் (க்ரியா)
3. தண்டனை - தஹர் பென் ஜெலுன் (தடாகம்)
4. பெரியார்? - அ.மார்க்ஸ் (அடையாளம்)
5. எட்டு கதைகள் - இராஜேந்திரசோழன் (வம்சி)
6. அன்புள்ள டாக்டர் மார்க்ஸ் - ஷீலாரெளபாத்தம் (பரிசல்)
7. கரிக்கோடுகள் - ஜெயகாந்தன் (மீனாட்சி)
8. நூற்றாண்டு நாயகன் - ஆல்பெர் காம்யு, சா. தேவதாஸ் (கருத்துப் பட்டறை)
9. வரலாறும் வக்கிரங்களும் - ரொமிலா தாப்பர் (அலைகள்)
10. கிம் கி டுக்கின் சினிமாட்டிக் ஊடல்கள் - ஜமாலன் (நிழல்)


message 9: by Prem (new)

Prem | 225 comments Mod
சென்னை புத்தகக் கண்காட்சியில் ஜனவரி 17, 18, 19 நாட்களில் நடக்கப் போகும் நிகழ்சிகள்:




message 10: by Prem (new)

Prem | 225 comments Mod
புத்தகக் கண்காட்சியில் மட்டுமே கிடைக்கும் புத்தகங்கள், மிக அரிதாகவே பதிப்பிக்கப்படும் புத்தகங்கள், சிறிய பதிப்பகங்கள் பதிப்பிக்கும் புத்தகங்கள் பற்றி பனுவல் ராம் இந்தக் காணொலியில் பேசியுள்ளார். https://www.youtube.com/watch?v=U3xub...

1. கில்காமெஷ் - ஆதி காவியம், தமிழில் க.நா.சுப்ரமண்யம் (சந்தியா பதிப்பகம்)
2. காளி நாடகம் - உண்ணி ஆர், தமிழில்: சுகுமாரன்
இந்திய இலக்கியச் சிற்பிகள் ஜி.நாகராஜன் - தொகுப்பு சி. மோகன் (சாகித்திய அகாதெமி பதிப்பகம் )
3. பாபாசாகேப் அம்பேத்கரின் பௌத்த ஆக்கங்கள் - தொகுப்பு பேரா . முனைவர் . க. ஜெயபாலன் (மெத்தா பதிப்பகம்)
4. இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் - க.நா.சுப்ரமண்யம் (தேனீர் பதிப்பகம்)
5. அவன் காட்டை வென்றான் - கேசவ் ரெட்டி தமிழில் ஏ ஜி எத்திராஜிலு
6. தீண்டாமைக்குள் தீண்டாமை - சி. லட்சுமணன், கோ, ரகுபதி (புலம் பதிப்பகம்)
8. கொய்யாவின் வாசனை - கேரியல் கார்சியா மார்க்வெஸ், மென்டோசா
தமிழில்: பிரம்மராஜன்
9. சுதந்திரமும் மக்கள் விடுதலையும் - கோபட் கந்தி தமிழில்: மு. வசந்தகுமார்
10. கருப்பினத்தவரின் ஆன்மாக்கள் - டபிள்யு ஈ பி டியு போய்ஸ் தமிழில் சிந்தனா சிந்தன் பதிப்பகம்


message 11: by Prem (last edited Jan 20, 2024 08:05PM) (new)

Prem | 225 comments Mod
வாசிப்பு மற்றும் புத்தகங்கள் பற்றி பதிவிடும் மற்றொரு YouTube காணொலி ஓடை "இலக்கியக் குரங்குகள்". புத்தகக் கண்காட்சியில் முக்கிய பதிப்பகங்களின் அரங்குகளில் இந்த வருடம் வெளியாகியுள்ள புது புத்தகங்கள், அதிகம் விற்கப்படும் புத்தகங்கள் பற்றி பதிவிட்டுள்ளனர். 2024 சென்னை புத்தகக் கண்காட்சியின் கடைசி நாள் இன்று. இன்று கண்காட்சிக்கு செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்!

பனுவல் அரங்கு - https://youtu.be/g-Bf0NN913U
தேசாந்திரி பதிப்பகம் - https://youtu.be/TbI6PVm8O90
வாசகசாலை பதிப்பகம் - https://youtu.be/LT_RSKSILwE
நீலம் பதிப்பகம் - https://youtu.be/i2hYOyG3So4
ஜீரோ டிகிரி பதிப்பகம் - https://youtu.be/pq4xzeT0TBs
தடாகம் பதிப்பகம் - https://youtu.be/iozL40EYJ84
Pure Cinema - https://youtu.be/H2aBqgWUw84


message 12: by Prem (new)

Prem | 225 comments Mod
ஒரு இளைய எழுத்தாளர் தனது சக எழுத்தாளர்கள், மூத்த எழுத்தாளர்களை நேர்காணல் செய்வது அதுவும் புத்தகங்களுக்கு நடுவே புத்தகக் கண்காட்சியில் என்பது மேலும் சிறப்பு. எழுத்தாளர் அகரமுதல்வன் எழுத்துக்களை சில நாட்களாக விரும்பி வாசித்து வருகிறேன். அவர் சென்னை புத்தகக் கண்காட்சியில் பிரபல எழுத்துதாளர்களை செய்த நேர்காணல்கள்:



இணைப்பு: https://akaramuthalvan.com/?p=1721

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்களுடன்: https://youtu.be/kwBxHf5RUsE
எழுத்தாளர் அஜிதனுடன்: https://www.youtube.com/watch?v=QUqEG...
எழுத்தாளர் செந்தில் ஜெகன்னாதனுடன்: https://youtu.be/X3imX2tOTkU
எழுத்தாளர் முத்துராசா குமாருடன்: https://youtu.be/l8OLEy1v-10
எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனுடன்: https://youtu.be/2tgtWH4MFYg
கவிஞர் மனுஷ்யபுத்திரனுடன்: https://youtu.be/HO6mQ56lr7k
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுடன்: https://youtu.be/iMMnj8SZoI4
எழுத்தாளர் ஜெயமோகனுடன்: https://youtu.be/Sk-uBpwmUig
எழுத்தாளர் அ. வெண்ணிலாவுடன்: https://youtu.be/i81e1iPMxGo


message 13: by Prem (new)

Prem | 225 comments Mod
நடந்து முடிந்த சென்னை புத்தக கண்காட்சியின் முக்கிய பதிப்பகங்களில் பரவலாக வாங்கப்பட்டு புத்தகங்கள் பற்றிய காணொலி பதிவு: https://www.youtube.com/watch?v=4bDQ_...

விஷ்ணுபுரம் பதிப்பம் - 0:01
டிஸ்கவரி புக் பேலஸ் - 3:59
சந்தியா பதிப்பகம் - 5:49
காலச்சுவடு பதிப்பகம் - 8:15
ஜீரோ டிகிரி - 12:15
எதிர் வெளியீடு - 13:30
தேசாந்திரி பதிப்பகம் - 16:26
பாரதி புத்தகாலயம் - 17:29
யாவரும் பப்ளிஷர்ஸ் - 20:35
உயிர்மை பதிப்பகம் - 24:16
நூல்வனம் - 25:15
கருப்புபிரதிகள் - 26:05
வம்சி புக்ஸ் - 30:49
நீலம் பதிப்பகம் - 31:41
பனுவல் புத்தக நிலையம் - 33:07
கிழக்கு பதிப்பகம் - 35:20
நற்றிணை பதிப்பகம் - 35:46
புலம் பதிப்பகம் - 36:26
சால்ட் பதிப்பகம் - 37:43
பரிசல் புத்தக நிலையம் - 38:47
சுட்டி யானை - 40:05
சுவாசம் பதிப்பகம் - 41:00


message 14: by Prem (new)

Prem | 225 comments Mod
சென்னையைத் தொடர்ந்து திருப்பூரிலும் , நாமக்கலிலும் புத்தகக் கண்காட்சி தொடங்க இருக்கின்றது.

திருப்பூர் புத்தக கண்காட்சி:
நாட்கள்: ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை
இடம்: ஹோட்டல் வேலன் வளாகம் (காங்கேயம் ரோடு)
நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை

நாமக்கல் புத்தக கண்காட்சி:
நாட்கள்: ஜனவரி 26 முதல் பிப்ரவரி 2 வரை
இடம்: அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை


message 15: by Prem (last edited Feb 21, 2024 05:16AM) (new)

Prem | 225 comments Mod
பல ஊர்களில் தொடர்ந்து புத்தகத் திருவிழாக்கள் நடந்து வருகின்றன.

வேலூர் புத்தக திருவிழா:
நாட்கள்: பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 27 வரை
இடம்: நேதாஜி ஸ்டேடியம்

நாகர்கோவில் புத்தக திருவிழா:
நாட்கள்: பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 27 வரை
இடம்: அரசு உயர்நிலைப் பள்ளி மைதானம்

வரப்போகும் புத்தகத் திருவிழா
திருவள்ளுர் (ஆவடி)
நாட்கள்: பிப்ரவரி 23 முதல் மார்ச் 3 வரை
இடம்: இன்னும் உறுதியான தகவல் இல்லை

உசாத்துணை: https://www.youtube.com/watch?v=BjJqY...


message 16: by Satheeshwaran (new)

Satheeshwaran (goodreadscombooktagforum) | 6 comments Prem wrote: "பல ஊர்களில் தொடர்ந்து புத்தகத் திருவிழாக்கள் நடந்து வருகின்றன.

வேலூர் புத்தக திருவிழா:
நாட்கள்: பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 27 வரை
இடம்: நேதாஜி ஸ்டேடியம்

நாகர்கோவில் புத்தக திருவிழா:
நாட்கள்: பிப..."


உங்க influence use பண்ணி அமெரிக்கா - வுக்கும் புத்தக திருவிழாக்கள கொண்டுவாங்க பிரேம் :D


message 17: by Vivek (new)

Vivek KuRa (vivkulan) | 8 comments I second Sateesh's request. If it is possible,we should should do it . At least a virtual book fair.


message 19: by Ganesamoorthy K (new)

Ganesamoorthy K | 3 comments புத்தக திருவிழாக்கள் மக்களிடம் நிச்சயமாக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது! ஆனால் மிக குறைவான ஸ்டால்களே இருக்கின்றன. நிறையா பதிப்பகங்கள் இருப்பதில்லை.


கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர் (manimaaran) Ganesamoorthy K wrote: "புத்தக திருவிழாக்கள் மக்களிடம் நிச்சயமாக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது! ஆனால் மிக குறைவான ஸ்டால்களே இருக்கின்றன. நிறையா பதிப்பகங்கள் இருப்பதில்லை."

முற்றிலும் உண்மை. சென்ற முறை தஞ்சாவூரில் நடந்த புத்தகத் திருவிழாவில் பல முதன்மையான பதிப்பகங்கள் பங்குபெறவேயில்லை. எஸ்.ரா, ஜெயமோகன் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் கூட ஒன்றுமே கிடைக்கவில்லை.


message 21: by Prem (last edited Feb 22, 2024 05:09AM) (new)

Prem | 225 comments Mod
Satheeshwaran wrote: உங்க influence use பண்ணி அமெரிக்கா - வுக்கும் புத்தக திருவிழாக்கள கொண்டுவாங்க பிரேம் :D

Influence -ஆ.?! நடந்தா நல்லாத்தான் இருக்கும். இப்பதான் துபாய் புத்தகத் திருவிழாலயே தமிழ் பதிப்பகங்கள் கலந்துக்க ஆரம்பிச்சி இருக்கு. வருங்காலத்தில அமெரிக்காவில் சூரியன் இல்ல இலைகள் இல்ல தாமரை துளிர்த்தால் நம்ம புத்தகத் திருவிழா நடக்கலாம் :D

Vivek wrote: I second Sateesh's request. If it is possible,we should should do it . At least a virtual book fair.

நாம என்ன பண்ணமுடியும்? மெய்நிகர் புத்தகத் திருவிழாவாத்தான் பல பேர் காணொலி போடுறாங்க. அதைப் பார்த்து ஒரு பக்கம் மகிழ்ச்சியும், இன்னொரு பக்கம் போக முடியலைன்னு ஆற்றாமையும்தான் இருக்கு :/ இப்ப நீங்களும் காணொலி ஓடை (https://www.youtube.com/@booklamp77/v...) ஆரம்பிச்சிட்டீங்க.. உங்ககிட்ட இருக்கிற நூலகம் பத்தி ஒரு காணொலி போடுங்க :)


message 22: by Prem (last edited Feb 22, 2024 05:16AM) (new)

Prem | 225 comments Mod
Ganesamoorthy K wrote: "புத்தக திருவிழாக்கள் மக்களிடம் நிச்சயமாக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது! ஆனால் மிக குறைவான ஸ்டால்களே இருக்கின்றன. நிறைய பதிப்பகங்கள் இருப்பதில்லை."

மணிமாறன் wrote: "முற்றிலும் உண்மை. சென்ற முறை தஞ்சாவூரில் நடந்த புத்தகத் திருவிழாவில் பல முதன்மையான பதிப்பகங்கள் பங்குபெறவேயில்லை. எஸ்.ரா, ஜெயமோகன் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் கூட ஒன்றுமே கிடைக்கவில்லை."

நீங்க குடுத்த காணொலி இணைப்பு பார்த்துட்டு பதிவிடுகிறேன். உங்கள் பதிவிற்கு நன்றி கணேஷ், மணிமாறன்!

ஆமா நிறைய ஊர்களில் ஒரே நேரத்தில புத்தகத் திருவிழா நடக்கிறதால எல்லா பதிப்பகங்களும் எல்லா ஊருக்கும் வர்றதில்லை போல. அவ்வளவு பெரிய சென்னை புத்தகத் திருவிழாவிலேயே வருமானம் இல்லைன்னு சொல்றப்ப சின்ன ஊர்ல வர்றது கஷ்டம்தான் போல. தொடர்ந்து புத்தகத் திருவிழாக்கள் நடந்து நிறைய மக்கள் புத்தகங்கள் வாங்கினால வரும் ஆண்டுகளில் இந்த நிலை மாறும்ன்னு நினைக்கிறேன்.


message 23: by Ganesamoorthy K (new)

Ganesamoorthy K | 3 comments கண்டிப்பாக!!


message 24: by Prem (new)

Prem | 225 comments Mod
தமிழக ஊர்கள்தோறும் மீண்டும் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

இணைப்பு: https://www.youtube.com/watch?v=CQa7o...

ஓசூர் புத்தக திருவிழா
நாட்கள்: ஜூலை 12 முதல் ஜுலை 23 வரை
நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை
இடம்: ஓசூர் convention Center, Hotel Hills

தஞ்சாவூர் புத்தக திருவிழா
நாட்கள்: ஜூலை 19 முதல் ஜுலை 29 வரை
நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை
இடம்: அரண்மனை வளாகம் (பழைய பேருந்து நிலையம் அருகே)

கோயம்புத்தூர் புத்தக திருவிழா (கோவை புத்தக திருவிழா)
நாட்கள்: ஜூலை 19 முதல் ஜுலை 28 வரை
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை
இடம்: கொடிசியா வளாகம் (காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 20A, 10C பேருந்து)

புதுக்கோட்டை புத்தக திருவிழா
நாட்கள்: ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5 வரை
இடம்: புதுக்கோட்டை ராஜாஸ் (மன்னர்) கல்லூரி மைதானம்

ஈரோடு புத்தக திருவிழா
நாட்கள்: ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 13 வரை
இடம்: சிக்கையா நாயக்கர் கல்லூரி


message 25: by Prem (last edited Oct 01, 2024 10:26AM) (new)

Prem | 225 comments Mod
திருச்சி புத்தகத் திருவிழா:

நாட்கள்: செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 7 வரை
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை
இடம்: சி எஸ் ஐ செயிண்ட் ஜான்ஸ் வெஸ்டிரி மேல்நிலைப் பள்ளி மைதானம்














message 26: by Prem (last edited Jan 08, 2025 09:51AM) (new)

Prem | 225 comments Mod
"மாறாப் புன்னகையோடும் தீரா உற்சாகத்தோடும்" புத்தகங்கள் பற்றியும் புத்தகத் திருவிழாக்கள் பற்றியும் சளைக்காமல் காணொளிப் பதிவுகள் ஏற்றும் "ஆல்டீஸ் அரட்டை அரங்கம்", 2025 சென்னை புத்தகத் திருவிழாவை முழுவதும் பார்வையிட்டு அவருக்கு முக்கியமானதாகத் தோன்றும் கடைகள் பற்றி நான்கு பதிவுகள் பதிந்துள்ளார். அது போக குழந்தைகள் புத்தகங்கள் மற்றும் புத்தகக்கடைகள் பற்றி ஒரு பதிவும் பார்க்கக் கிடைக்கின்றது. திருவிழாவிற்கு செல்பவர்களுக்கு எங்கே எந்த புத்தகம் கிடைக்கின்றது என்று பயனுள்ளதாகவும், செல்ல இயலாதவர்களுக்கு மெய்நிகர் அனுபவமாக திருவிழாவை சுற்றி வந்த அனுபவமாகவும் இருக்கும்.


முக்கியமான புத்தக அரங்குகள்:
பதிவு 1: https://www.youtube.com/watch?v=kgkNS...
பதிவு 2: https://www.youtube.com/watch?v=vVyTW...
பதிவு 3: https://www.youtube.com/watch?v=2-4o_...
பதிவு 4: https://www.youtube.com/watch?v=aXSri...

குழந்தைகள் புத்தக அரங்குகள்: https://www.youtube.com/watch?v=rGMRe...

இவர் வாங்கிய புத்தகங்கள்: https://www.youtube.com/watch?v=VnKQa...


message 27: by Prem (last edited Jan 08, 2025 09:42AM) (new)

Prem | 225 comments Mod
சென்னை புத்தகத் திருவிழாவில் ஜனவரி 9, 10, 11, 12 நாட்களில் நடக்கப் போகும் நிகழ்சிகள் இங்கே:






message 28: by Balaji (new)

Balaji (balajiv) | 2 comments Super


back to top